மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நேற்று சென்னை வந்த அவர், முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து, இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி முன்னலையில் கே.எஸ்.கே.ராஜேந்திரன் சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகர் அரங்கில் நடைபெற்ற எளிய விழாவில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.