தமிழ்நாட்டில் வருகிற ஜூலை 3 ஆம் தேதி முதல் மாலை நேர நீதிமன்றங்கள் செயல்படவுள்ளன!
குஜராத் மாநிலத்தை அடுத்து தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 11 மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கப்படவுள்ளன.
சென்னையில் 4 மாலை நேர நீதிமன்றங்களும், கோவை, நெல்லையில் தலா 2 நீதிமன்றங்களும், மதுரை, சேலம், திருச்சியில் தலா ஒரு நீதிமன்றமும் முதல்கட்டமாக செயல்படத் துவங்கும்.
மாலை 6 மணி முதல் 8 மணி வரை செயல்படவுள்ள இந்த மாலை நேர நீதிமன்றங்களின் செயல்பாட்டைப் பொருத்து இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ஜூலை 9 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பி. ஷா லேப்டாப்களை வழங்குகிறார்.