வங்க கடலில் காற்றழுத்த தாழி: தமிழ் நாட்டில் மழை நீடிக்கும்

Webdunia

வியாழன், 21 ஜூன் 2007 (19:31 IST)
வங்க விரிகுடா கடலில் மேற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விசாகப்பட்டிணத்தில் இருந்து தென் கிழக்காக 400 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை பிற்பகல் விசாகப்பட்டிணத்திற்கும், நரசாபூருக்கும் இடையே கரையை கடக்கலாம் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளது.

தென் மேற்கு பருவ மழை கேரளா, கடரோர கர்நாடகா, ஆந்திரத்தின் தெலுங்கானா பகுதிகளில் நல்ல மழையை அளித்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் கடரோ ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் 25 செ.மீ. அதிகமாக பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிலும், புதுவையிலும், ஆங்காங்கு கனத்த மழை பெய்யும் என்றும், சென்னையிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மிதமானது முதல் கனத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்