திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக நிலம் அளந்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணி பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை விமான நிலையம் அருகில் உள்ள நத்தம்மாடிப்பட்டி, யாகப்பா நகர், சவேரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சிலர் நிலத்தை அளந்து கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்தனர். ஏற்கனவே ஒரு முறை எங்களது நிலங்களை விட்டுக் கொடுத்தோம். இனி விட்டுத்தர மாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர். பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஏற்படுத்தினார்கள்.