அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் எம்.பி. விஜயகுமார் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 1 முதல் 4ஆம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் மூலம் கற்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு பல்வேறு நிலையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து தற்போது விலை குறைந்த பொருட்களைக் கொண்டு பொம்மைகள், அறிவியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பொருட்கள் தயாரித்தல் குறித்து மாவட்ட அளவில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.702 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் சரிபாதி நிதியை வழங்கி உள்ளன என்றார்.