குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் சென்னை வருகை

Webdunia

ஞாயிறு, 17 ஜூன் 2007 (14:48 IST)
ஐக்கிய முற்போக்கு, இடது சாரிகள் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் அடுத்த மாதம் முதல் வாரம் செனனை வருகிறார்.

முதல்வர் க்ருணாநிதியிடம் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அவர், தம்மை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கோரி அடுத்தமாதம் நடக்க உள்ள மகளிர் பேரணியில் பிரதிபா கலந்து கொள்ள வேண்டுமென கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதிபா, அடுத்த மாதம் முதல் வாரம் சென்னை வர ஒப்புக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்