குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அதிமுக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மூன்றாவது அணி அதன் முடிவில் செல்வதாகவும், காங்கிரஸ் வேட்பாளர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு தாங்கள் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றார்.
இது அதிமுகவின் முடிவா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, மூன்றாவது அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் முடிவு இதுதான் என்று கூறினார்.
வருகிற 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மூன்றாவது அணித் தலைவர்கள் பங்கேற்கும் 2 ஆம் கட்ட கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்யப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.