காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் பலி

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற திருச்சியை சேர்ந்த இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி ஜெயபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம், அவரது நண்பர் முரளியும் நேற்றிரவு காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர், காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, இருவரது உடல்களும் இன்று காலை மீட்கப்பட்டன. ஆற்று மணலில் சிக்கி இவரும் உயிரிழந்திருக்க கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.


வெப்துனியாவைப் படிக்கவும்