மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை மேற்கு தொகுதிக்கு வருகிற 26 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள். நேற்று வரை சுயேட்சிகள் உள்பட 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில்,திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக கே.எஸ்.கே.ராஜேந்திரன் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை நேற்று அறிவித்தது. இதையடுத்து, இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக சார்பில் செல்லூர் ராஜூம், தேமுதிக சார்பில் சிவ முத்துக்குமாரும், பாரதிய ஜனதா சார்பில் சசிராமனும் போட்டியிடுகின்றனர்.