குடியரசுத் தலைவர் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்து 3 வது அணி விரைவில் முடிவு எடுக்கும் என்று ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆந்திராவில் 3 வது அணித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றதாக கூறினார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளும், முன்னாள் முதலமைச்சர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொணடதாக தெரிவித்த அவர், சில மாநிலங்களில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் தேசிய கட்சிகளின் செல்வாக்கை குறைத்திருப்பதை காட்டுகிறது என்றார்.
புதிதாக உருவாகி உள்ள 3 வது அணி மக்களின் தேவைகளையும், அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இன்னும் 15 நாட்களில் 3 வது அணி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், குடியரசுத் தலைவர் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்து விரைவில் முடிவெடுகப்படும் என்றும் அவர் கூறினார்.