இந்த கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏதும் இருக்காது என்று சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
யூ.என்.ஐ. செய்தியாளரிடம் பேசியுள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை பொறியாளர் சிவக்குமார், " நிச்சயமாக இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு சென்னை நகர மக்களுக்கு இருக்காது " என்று கூறினார்.
57 முதல் 60 கோடி லிட்டர் தண்ணீர் சென்னையின் தேவைக்காக குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்றும், இது மட்டுமின்றி 1300 முறை லாரிகளின் வாயிலாக ஒவ்வொரு நாளும் விநியோகம் செய்யப்படுவதாகவும் சிவக்குமார் கூறினார்.