கேரளத்திலும் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தென் மேற்கு பருவ மழை பொழிய தொடங்கிவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் எஸ்.ஆர்.ரமணனன் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 செ.மீ. மழையும் தக்கலையில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளதாகக் கூறினார்.
கிருஷ்ணகிரி, வாள்பாறையில் நேற்று 5 செ.மி அளவிற்கு கோடை மழை பொழிந்துள்ளதாகவும் ரமணனன் கூறினார். பொதுவாக ஜூன் 1 ஆம் தேதி துவங்கும் தென் மேற்கு பருவ மழை ஒரு வாரம் முன்னதாகவே பொழிய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலும் அதன் புற நகர் பகுதியிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடத்தில் லேசாக மழை பெய்யலாம் என்றும் ரமணனன் கூறியுள்ளார்.