திருச்சியில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தூத்துக்குடி அருகே உள்ள வாழசமுத்திரம் அருகே பாலத்தில் கவிழ்ந்தது.
இதில் பேருந்து ஓட்டுனர் பலியானார். பேருந்தில் பயணம் செய்த 26 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.