ராதிகா செல்வி மத்திய அமைச்சராகிறார்!

திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர் ராதிகா செல்வி மத்திய அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார்.

மத்திய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றம் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பதவி விலகியதை அடுத்து அப்பொறுப்பை தற்பொழுது வனம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு வகித்து வரும் அ. ராசா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகப் பொறுப்பை ஏற்கிறார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பை மேற்கோள்காட்டி தமிழக அரசின் செய்தி-விளம்பரத் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

தற்பொழுது சட்டத் துறை துணை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் ரகுபதி வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகப் பொறுப்பை ஏற்கிறார்.

துணை அமைச்சராக பொறுப்பேற்க உள்ள ராதிகா செல்வி ஏற்கப் போகும் அமைச்சகப் பொறுப்பு குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்