அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப் பேரவை கட்டடம்!

சென்னை அண்ணா சாலைக்கும் வாலாஜா சாலைக்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ள தமிழக அரசினர் தோட்டத்தில் தமிழக சட்டப் பேரவைக்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது!

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழக சட்டப் பேரவைக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் இதனால் ஏற்கனவே அங்குள்ள ராஜாஜி மண்டபம் கலைவாணர் அரங்கம் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான புதிய தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான பழைய விடுதியும் தமிழகக் காவல் துறையினர் குற்றப் பிரிவு சிறப்பு புலனாய்வுத் துறையும் இயங்கும் கட்டடமும் இடிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்