ஆஸ்ட்ரேலிய வீரர்கள் மேத்யூ ஹெய்டன், ஆடம் கில்கிறிஸ்ட் குறித்து ஹர்பஜன் சிங் கூறிய கருத்துக்கள் தேவையற்றது என்றும், ஹர்பஜன் சிங்கை அடக்கி வையுங்கள் என்றும் கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளது!
ஆஸ்ட்ரேலிய வானொலியில் மேத்யூ ஹெய்டன், ஹர்பஜன் சிங் குறித்து மோசமான கருத்தைக் கூறியதிலிருந்து இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.
அதன் பிறகு, மேத்யூ ஹெய்டன் எச்சரிக்கையுடன் மன்னித்து விடப்பட்டார். தற்போது சி.பி.தொடரில் பெற்ற வெற்றியுடன் இந்திய அணி நாடு திரும்பியவுடன், ஹர்பஜன் சிங் பத்திரிக்கைகளுக்கு தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார்.
அதுபோன்ற பேட்டி ஒன்றில் மேத்யூ ஹெய்டன் ஒரு மிகப்பெரிய பொய்யர் என்றும், ஆடம் கில்கிறிஸ்ட் ஒன்றும் ரிஷி அல்ல என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில் ஹர்பஜனை கண்டித்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.