கோழி காய்ச்சல் நோய், கோழி பண்ணை உரிமையாளர்கள், அசைவ பிரியர்களை மட்டுமின்றி இந்திய பாட்மிட்டன் சங்கத்தையும் (பி.ஏ.ஐ.) கலங்கடித்துள்ளது.
ஹைதராபாத்தில் ஏப்ரல் மாதம் 'இந்தியன் கிராண்ட் பிக்ஸ்' போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் பி.ஏ.ஐ. வசம் பூப்பந்துகள் மிக குறைவாகவே உள்ளன.
இதுகுறித்து, பி.ஏ.ஐ. துணை தலைவர் டி.பி.எஸ். புரியிடம் கேட்டதற்கு, "இந்தியாவில் கடுமையாக பரவிய கோழி காய்ச்சலால் பூப்பந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், விளையாட்டு அமைச்சகத்தின் புதிய விதியின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பூப்பந்துகளை இறக்குமதி செய்ய உள்ளோம். ஏப்ரலில் நடைபெற உள்ள கிராண்ட் பிக்ஸ் போட்டி தான் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவதற்கான இறுதி வாய்ப்பு" என்றார்.
ஜப்பானின் யோனெக்ஸ் பகுதியில் இருந்து இந்தியா 10 ஆயிரம் டஜன் பூப்பந்துகளை இறக்குமதி செய்கிறது. இவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இதற்கு ஆகும் செலவை சரிகட்ட தேசிய அளவிலான முகாம்கள் நடத்த இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் பாட்மிட்டன் சங்கத்தை அறிவுறுத்துயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.