மெல்போர்ன் ஒருநாள் : இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு!

ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (14:05 IST)
முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 4-வது ஆட்டத்தில், இந்தியாவுக்கு 160 ரன்கள் என்ற எளிமையான வெற்றி இலக்கை ஆஸ்ட்ரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

மெல்போர்னில் நடைபெறும் இப்போட்டியில் பூவா, தலையா வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய அணி, 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கில்கிறிஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும், பான்டிங் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதைத்தொடர்ந்து, ஹைடன் 25 ரன்களிலும், மைக்கேல் கிளார்க் 11 ரன்களிலும், சைமன்ட்ஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், நிதானமாக பேட் செய்த மைக்கேல் ஹஸ்சே ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து, அணியின் ரன் எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினார்.

அதன்பின் களமிறங்கிய ஹிதின், பிரட் லீ, ஜான்சன், பிராக்கென் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய ஆட்டக்காரர்களான ஹைடன், பான்டிங், சைமன்ட்ஸ் ஆகியோரை வீழ்த்திய இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளையும், ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளையும், பதான் 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்