ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் டைட் ஓய்வு அறிவிப்பு!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (21:08 IST)
ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் காலவரையின்றி ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலிய அணியின் 'வேக இயந்திரம்' என்று நம்பப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பந்து வீசுபவர். இவர் தோள் பட்டை, முதுகு காயம் காரணமாக இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். சமீபத்தில் மீண்டும் விளையாட வந்த டைட்டுக்கு பெர்த்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கூட கிடைக்கவில்லை. இதனால் அடிலெய்டில் நடந்த இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

எனினும் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, இலங்கஇடையநடைபெஉள்முத்தரப்பஒரநாளதொடருக்காஅணியிலஇடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஒருநாள், டெஸ்ட் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கால வரையின்றி ஓய்வு பெறுவதாக 24 வயதேயான டைட் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இது ஒரு இரவில் எடுக்கப்பட்ட முடிவல்ல. இந்த ஓய்வு எனது உடலுக்கும், மனதுக்கும் நிம்மதி அளிக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய மகிழ்ச்சியான ஆட்டம் இதனால் பாதிக்கப்படுகிறது. நான் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றால் அது, சக அணி வீரர்களுக்கும், எனக்கு ஆதரவளிக்கும் அதிகாரிகளுக்கும், முக்கியமாக எனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் சங்கடத்தை அளிக்கும்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்