ஆல்ரவுண்டராக ‌திகழ முடியும் : ப‌த்தா‌ன்!

Webdunia

சனி, 15 டிசம்பர் 2007 (16:31 IST)
எ‌ன்னா‌ல் ‌சிற‌ந்த ஆ‌‌ல் ரவு‌ண்டராக ‌திகழ முடியு‌ம் எ‌ன்று இ‌ந்‌திய ‌‌வீர‌ர் இ‌ர்ஃபா‌ன் ‌ப‌த்தா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌‌த்து ப‌த்தா‌ன் கூறுகை‌யி‌ல், பெ‌ங்களூ‌ரு பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி‌க்கு எ‌திராக சத‌ம் அடி‌த்த‌த‌ற்காக இறை‌வனு‌க்கு ந‌ன்‌றி சொ‌ல்‌கிறே‌ன். கங்குலிதான் என்னை உற்சாகப்படுத்தி சதம் அடிக்க நம்பிக்கை அளித்தார். ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னால் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பா‌கி‌ஸ்தானு‌க்கு எ‌திரான முதல் இரண்டு டெஸ்டில் இடம் பெறவில்லை. 3-வது டெஸ்டில் சேர்க்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. வாய்ப்பு கொடுத்த தேர்வு குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆஸ்‌ட்ரேலிய ஆ‌ட்ட‌க்கா‌ர‌ர்க‌ள் அனைவரும் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர்கள். ஆஸ்‌ட்ரேலியாவுக்கு எல்லா வகையில் எங்களால் ஈடுகொடுத்து விளையாட முடியும். எங்களது பேட்டிங் பலம் வா‌ய்ந்தது எ‌ன்று ப‌த்தா‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்