ஐசிசி தரவரிசையில் சங்ககாரா முதலிடம்!

Webdunia

வெள்ளி, 7 டிசம்பர் 2007 (16:32 IST)
டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி உலக தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் குமார் சங்கக்காரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் 152 ரன்களை எடுத்ததன் மூலம் இவர் இதுவரை முதலாம் இடத்திலிருந்த ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை புரிந்த முத்தையா முரளிதரன் முதலிடம் வகிக்கிறார்.

தொடர்ந்து 4 டெஸ்ட்களில் 150க்கும் அதிகமாக ரன்களை குவித்ததால் சங்கக்காரா முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக ஜூலை மாதம் 200 மற்றும் 222 ரன்களை எடுத்த சங்ககாரா, சமீபத்தில் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக ஹோபார்ட்டில் 192 ரன்களை எடுத்தார். பிறகு இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 152 ரன்களை எடுத்தார் சங்ககாரா.

936 புள்ளிகளுடன் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்.

வெப்துனியாவைப் படிக்கவும்