இந்திய பிரிமியர் லீக்கில் விளையாட ஆஸ்‌ட்ரேலிய வீரர்களுக்கு தடை!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (10:59 IST)
''இந்திய பிரிமியர் லீக்கில் விளையாட ஆஸ்‌ட்ரேலிய வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை'' என்று அந்த நாட்டு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய பிரிமியர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல், மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் விளையாட ஆஸ்‌ட்ரேலிய அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பா‌ன்டிங், பிரெட்லீ, கில்கிறிஸ்ட், ஹைடன், மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹஸ்ஸி ஆகிய வீரர்கள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. அதோடு இந்த போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்‌ட்ரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்‌ட்ரேலிய வீரர்கள் யாருக்கும் இந்திய பிரிமியர் லீக்கில் விளையாட அனுமதி அளிக்கப்படவில்லை என்று அ‌ந்த நா‌ட்டு கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறுகை‌யி‌ல், சில முக்கியமான விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக திட்டமிடப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் லீக் போட்டியில் ஆஸ்‌ட்ரேலிய வீரர்கள் பங்கேற்பது, அதற்கான விதிமுறைகள் பற்றி முடிவு செய்யப்படவில்லை.

இந்திய பிரிமியர் லீக்குடன் இணைந்து செயல்படுவது குறித்த பல்வேறு விதிமுறைகள் ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு திருப்தி அளிக்கும் வரை ஆஸ்‌ட்ரேலிய அணியின் ஒப்பந்த வீரர்கள் யாரும் அந்த போட்டியில் விளையாட முடியாது. கிரிக்கெட் வாரியத்திடம் கலந்து ஆலோசிக்காமல் வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது எ‌ன்று ஜே‌‌ம்‌ஸ் சுத‌ர்லே‌ண்‌ட் கூ‌றினா‌ர்.

இது கு‌றி‌த்து ஆஸ்‌ட்ரே‌லிய அ‌ணி‌யி‌ன் வ‌ி‌க்கெ‌ட் ‌கீ‌ப்ப‌ர் ‌கி‌ல்‌கி‌றி‌ஸ்‌ட் கூறுகை‌யி‌ல், ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் சங்க விதிமுறைகளை மீற நினைக்கவில்லை. பிரிமியர் லீக் போட்டி ஆட்டம் சிறப்பானதாகும். வாய்ப்பு வழங்கப்பட்டால் அதில் விளையாடுவோம்' என்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்