டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நான்கு வாரங்களாக தொடர்ந்து சனியா மிர்சா 32வது இடத்தில் உள்ளார். இரட்டையர் பிரிவில் சானியா ஒரு இடம் முன்னேறி 18வது இடத்தில் உள்ளார்.
வயிற்றுக் காயம் காரணமாக சமீப காலமாக சானியா மிர்சா விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில் விரைவில் ஹாப்மேன் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார். இதில் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து அவர் ஆட உள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஏடிபி ரேங்கிங் பட்டியலில் சானியாவுக்கு இரட்டையர் பிரிவில் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டு 19வது இடத்தில் இருந்து 18வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். இரட்டையர் பிரிவில் தொடர்ந்து நான்கு வாரங்களாக அவர் 32வது இடத்தில் உள்ளார்.
போபண்ணா 261வது இடத்திலும், பிரகாஷ் அமிர்தராஜ் 271வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த சுனில் குமார் சிப்பாயா 561வது இடத்தில் உள்ளார்.
லியாண்டர் பயஸ், 13வது இடத்திலும், மகேஷ் பூபதி 21வது இடத்திலும் உள்ளனர்.