தே‌ர்வு குழுவை ‌விம‌ர்சன‌ம் செ‌ய்த ‌அ‌ட்ட‌ப்ப‌ட்டு ‌நீ‌க்க‌ம்?

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (10:59 IST)
இல‌ங்கை ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌‌ணி‌யி‌ன் தே‌ர்வு‌க்குழுவை கடுமையாக ‌விம‌ர்சன‌ம் செ‌ய்த அ‌ட்ட‌ப்ப‌ட்‌டு ‌மீது கடுமையான நடவடி‌க்கை ஒ‌ரிரு நா‌ளி‌ல் தெ‌ரி‌ந்து‌விடு‌‌ம் எ‌ன்று அ‌‌ணி‌‌யி‌ன் மானேஜ‌ர் ‌‌ஷி‌ரிய‌ன் சமரர‌த்னே கூ‌றினா‌ர்.

ஆஸ்‌ட்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடி வரும் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அ‌‌ட்டப்பட்டு, இலங்கை அணியின் தேர்வு குழுவை கடுமையாக சாடியிருந்தார். பொம்மைகள் போன்ற தேர்வாளர்கள் கோமாளி தலைமையில் செயல்படுவதாக அவர் விமர்சித்தார்.

அ‌ட்ட‌ப்ப‌‌ட்டி‌ன் இந்த பேட்டி இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அ‌‌ட்டப்பட்டு மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இது கு‌றி‌த்து இலங்கை அணி மானேஜர் ஷிரியன் சமரரத்னே கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய பின்னர் அ‌ட்டப்பட்டுவை திரும்ப அழைப்பதா? அல்லது அணியில் நீடிக்க செய்வதா? என்பது குறித்த முடிவை ஓரிரு நாளில் எனக்கு தெரியப்படுத்துவார்கள். இந்த விமர்சனத்தால் வீரர்களின் ஆட்ட திறன் பாதிக்காது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்