சுழ‌ற்ப‌ந்தை ‌சிற‌ப்பாக எ‌தி‌ர்கொ‌ள்வோ‌ம்: லாசன்!

Webdunia

வியாழன், 8 நவம்பர் 2007 (12:32 IST)
''வரும் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களை எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள்'' எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி ப‌யி‌ற்‌சியாள‌ர் ஜெ‌ய் லாச‌ன் கூ‌றினா‌ர்.

ொஹாலி போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜெப் லாசன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், ொஹாலி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம். இந்தியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களை விட இது வேகமாக இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சு போதிய அளவுக்கு எடுபடாது.

கடந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசி எங்களது பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார்கள். இப்போது அதை பற்றி சிந்தித்து நல்ல முடிவு எடுத்து இருக்கிறோம். வரும் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களை எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க திட்டம் வகுத்து உள்ளோம்.

இந்த போட்டிக்கான அணியில் அதிக மாற்றங்களை செய்ய விரும்பவில்லை. இறுதி 11 வீரர்கள் தேர்வு குறித்து அண‌ி‌த் தலைவ‌ர், நிர்வாகத்தினருடன் விவாதித்து முடிவு செய்யப்படும் எ‌ன்று ப‌யி‌ற்‌சியாள‌ர் ஜெ‌ய் லாச‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்