பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது மைதானங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, ரசிகர்களால் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்படும் என கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன்ஷா தெரிவித்துள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான போட்டிகளின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித குறைவும் இல்லை என்ற போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்களின் போது ரசிகர்கள் உணர்ச்சி வசப்படலாம் என்பதால் கிரிக்கெட் வாரியம் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதாக நிரஞ்சன்ஷா தெரிவித்தார்.