இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கர் சம்மதித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை ஏற்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதாக கிரிக்கெட் வாரியத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 8ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி முடிவடைந்ததும் சச்சின் டெண்டுல்கர் அணித் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
இதனிடையே ஒரு நாள் போட்டியில் அணித் தலைவர் பதவியை வகித்து வரும் தோனியின் செயல்பாடு கிரிக்கெட் வாரியத்திற்கு திருப்தி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் டெஸ்ட் அணித் தலைவர் பதவியையும் அவருக்கு அளித்து கூடுதல் சுமையை ஏற்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 2000ம் ஆண்டில் டெண்டுல்கர் அணித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.