இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை போலவே அவரது நீண்ட தலைமுடியும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.
ஏன்? பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் டோனியின் ஹேர்ஸ்டைலை பார்த்து வியந்து போனார். அந்த அளவுக்கு அழகாக இருந்தது.
அதுமட்டுமின்றி தோனி தனது ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.
ஆனால் பாகிஸ்தான் அதிபரோ, தோனி தனது தலைமுடியை வெட்டிக் கொள்ளக் கூடாது என்று ஆலோசனை வழங்கினார்.
தற்போது தோனி என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார்.
திடீரென்று தோனி தனது தலைமுடியை வெட்டிக் கொண்டு புதிய தோற்றத்துடன் நேற்று தனது சொந்த ஊருக்கு சென்றார்.
20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியையும் வென்ற பின்னர் முதன் முறையாக தோனி ஜார்கண்ட்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்தார்.
பிர்சாமுண்டா விமான நிலையத்தில் தோனியை வரவேற்பதற்காக காத்திருந்த ரசிகர்கள் அவரது புதிய தோற்றத்தில் அடையாளம் தெரியாமல் திகைத்தனர். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் தோனியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.