முதுகு காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி இன்று மெல்பர்ன் புறப்பட்டுச் சென்றார்.
அவருக்கு அறுவை சிகிச்சை அடுத்த சில நாட்களில் நடைபெறலாம் என்று அவரது தந்தை கிருஷ்ணா பூபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக முதுகு காயம் தீவிரமடைந்ததாக மகேஷ் தொடர்ந்து கூறி வந்தார் என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.
மெல்பர்னுக்கு மகேஷ் பூபதியுடன் அவரது மனைவி ஸ்வேதாவும் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து மீண்டும் டென்னிஸ் விளையாட்டிற்கு இவர் ஜனவரியில் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.