ஆஸ்ட்ரேலிய அணி இந்தியா வந்தது

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (12:42 IST)
7 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் ஆஸ்ட்ரேலிய அணி நேற்று பெங்களூருக்கு வந்து சேர்ந்தது.

ஜோகன்னஸ்பர்கிலிருந்து துபாய் வழியாக வந்த விமானத்தில் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் பெங்களூர் வந்தடைந்தனர்.

பாரம்பரிய இசையான நாதஸ்வரத்துடன் ஆஸ்ட்ரேலிய அணி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல் ஒரு நாள் போட்டி சனிக்கிழமையன்று பெங்களூர் சின்னசுவாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகளும் மும்பை ப்ரபர்ன் மைதானத்தில் இருபதுக்கு 20 போட்டி ஒன்றிலும் விளையாடுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்