மகளிர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா ஒரு இடம் பின் தங்கி 28வது இடத்திற்கு வந்துள்ளார்.
காயம் காரணமாக கடந்த 2 வாரங்களாக சர்வதேச டென்னிஸ் எதிலும் பங்கேற்காததால் அவரது இடம் 28ற்கு பின்னடைந்துள்ளது. இரட்டையர் பிரிவு உலக தரவரிசையில் 19வது இடத்தில் உள்ளார் சானியா.
சன்ஃபீஸ்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் 2வது சுற்றுக்கு முன்னேறிய மற்றொரு இந்திய வீராங்கனை சுனிதா ராவ் மகளிர் ஒற்றையர் உலகக் தரவரிசையில் 211வது இடத்திலிருந்து 196வது இடத்திற்கு முன்னேறினார்.
ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் பூபதி 21வது இடத்தையும், லியாண்டர் பயஸ் 16 வது இடத்தையும் தக்கவைத்துள்ளனர். மற்றொரு வீரர் ரோகண் போபண்ணா இரட்டையர் தரவரிசையில் ஒரு இடம் பின் தங்கி 85ம் இடத்தில் உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் உலக தரவரிசையில் போபன்னா ஒரு இடம் முன்னேறி 244வது இடத்தில் உள்ளார்.