வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது : பிசிசிஐக்கு நீதிமன்றம்!

Webdunia

திங்கள், 27 ஆகஸ்ட் 2007 (16:05 IST)
இந்திய கிரிக்கெட் லீகில் சேர விரும்பும் வீரர்களமீதஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்நடவடிக்கையுமஎடுக்முடியாதஎன்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இணையாக இந்திய கிரிக்கெட் லீக் என்அமைப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனைக் கண்டித்து ஐ.சி.எல் உடன் சேரும் வீரர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் எந்தவித அணித்தேர்விலும் இடம்பெறமாட்டார்கள் என்றும், ஒப்பந்தம் காலாவதியாகும் என்றும் பிசிசிஐ வீரர்களை அச்சுறுத்தி வந்தது.

இதனையடுத்து ஐ.சி.எல். சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபது சஞ்சய் கிஷன் கவுல், எஸ்ஸல் குழுமத்தின் இந்திய கிரிக்கெட் லீகில் ஆட விரும்பும் வீரர்கள் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்று தடை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தை ஐசிஎல் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்து வந்த பிசிசிஐ, கர்நாடக மாநில கிரிக்கெட் வாரியம், மத்திய அரசு ஆகியவற்றிற்கு விளக்கம் கேட்டு தாக்கீதஅனுப்பியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் கிரிக்கெட் ஆடிவரும் வீரர்கள் ஐ.சி.எல் உடன் சேர்ந்தால் அவர்களது வேலை போய் விடும் என்று பொதுத்துறை நிர்வாகங்கள் மிரட்டுவதாய் எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வீரர்களை பணியை விட்டு அனுப்புவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்