ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நீளம் தாண்டல் இறுதிக்கு இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் தகுதி பெற்றுள்ளார்!
6.60 மீட்டர் தாண்டிய அஞ்சு, 11வது வீராங்கனையாக இறுதிக்குத் தகுதி பெற்றார்.
இறுதிக்குத் தகுதி பெற 6.75 மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 7 வீராங்கனைகள் மட்டுமே அந்த தூரத்தைத் தாண்டியதால் மேலும் 5 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 4வது வீராங்கனையாக அஞ்சு தகுதி பெற்றார்.
2004 ஆம் ஆண்டு நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அஞ்சு 6.83 மீட்டர் தாண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.