பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஹென்மேன் ஓய்வு

Webdunia

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (13:14 IST)
பிரிட்டனின் டென்னிஸ் வீரர் டிம் ஹென்மேன் சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயது நிரம்பிய ஹென்மேன் தனது 14 ஆண்டு டென்னிஸ் வாழ்வில் 6 முறை கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதிக்கு 4 முறை நுழைந்துள்ள இவர், வரும் செப்டம்பர் மாதம் குரோஷியாவிற்கு எதிராக நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தில் பங்கேற்பதுடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டில் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த இவர் 3 போட்டிகளை மட்டுமே வெற்றி பெற்றார். இதனால் உலக தரவரிசையில் 92ம் இடத்திற்கு வீழ்ச்சியடைந்தார்.

முதுகு வலி காரணமாக ஆட்டத்தில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை மேலும் அது பயிற்சியையும் பெரிதும் பாதித்து வருகிறது எனவே ஓய்வு பெறுவது பற்றி யோசித்து இந்த முடிவுக்கு வந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரு முறை மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் மேலும் ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்