இங்கிலாந்தின் கவுண்ட்டி அணியான லங்காஷேருக்கு ஆட இந்தியாவின் வெங்கட்சாய் லக்ஷ்மண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,878 ரன்களைக் குவித்துள்ள லக்ஷ்மண், இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை துவங்கும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்த பிறக லங்காஷேருக்காக ஆடத் துவங்குவார்.
மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லாய்ட், இந்தியாவின் ஃபரூக் என்ஜினியர், ஆஸ்ட்ரேலியாவின் பிராட் ஹாட்ஜ் போன்றவர்கள் நீண்டகாலம் ஆடிய அணி லங்காஷேர் என்பது குறிப்பிடத்தக்கது.
"கவுண்ட்டி கிரிக்கெட்டில் முதல் முறையாக விளையாட புகழ்பெற்ற லங்காஷேர் அணியிடம் இருந்து வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று லக்ஷ்மண்" கூறியுள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவின் பிராட் ஹாட்ஜ் இடத்தில் லக்ஷ்மண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தங்களது அணிக்கு பலம் சேர்க்கும் என்று அதன் மேலாளர் மைக் வாட்கின்சன் கூறியுள்ளார்.