2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் இந்திய பிரதமருக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாவின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்ததாக வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல என கூறப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளை, தொலைத் தொடர்புத்துறையின் பரிசீலனைக்கு பிரதமர் அனுப்பி வைத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பிரதமர் எழுதிய குறிப்புகளை, ஒப்புதல் கடிதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக, பிரதமரும், அவரது அலுவலகமும் ஒப்புதல் அளித்ததன் பேரிலேயே ஆ.ராசா செயல்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாயின.