இந்தியாவில் ஒலியை விட 5 மடங்கு வேகமுடைய ஏவுகணை

செவ்வாய், 26 பிப்ரவரி 2013 (16:39 IST)
FILE
உலகிலேயே அதிக வேகமுள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஈடுப்பட்டுள்ளது.

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 2017ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என்று இந்தியாவிலுள்ள பிரம்மோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை ஏவுகணைகள் முன்னுரிமை அடிப்படையில் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் என தெரிகிறது. அதீத சக்திவாய்ந்த இத்தைகைய ஏவுகணைகளை வாங்குவதற்காக வேறு சில நாடுகளும் ஆர்வமாக இருக்கின்றன.

இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வடிவமைத்து வருகிறது. இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்த, உலகிலேயே மிக வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் நீர் மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளும் உருவாக்க பிரம்மோஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்