'காவி பயங்கரவாதம்' ஷிண்டே கருத்துக்கு சல்மான் குர்ஷித் ஆதரவு
புதன், 23 ஜனவரி 2013 (13:41 IST)
FILE
பாஜக வின் மதம் சார் அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன. அவர்கள் காவி உடை தீவிரவாதிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் கருத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆதரவு கூறியுள்ளார்.
இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதாவும் சுஷில் குமார் ஷிண்டே யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் பதவி விலக வேண்டும் என்று முழங்கிவரும் நிலையில்,
"உள்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து உண்மை தான். புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் தெரியவந்த உண்மைகளைத் தான் அவர் கூறினார். புலனாய்வு அமைப்புகள், மத்திய அரசுக்கு தெரிவித்த தகவல்களை, உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் வெளிப்படுத்தினார். இந்தப் பிரச்னையை திசை திருப்பும் வகையில், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள், தேவையற்ற கருத்துக்களை கூறி வருகின்றன" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்துள்ளார்..
மேலும் கூறுகையில், "என்னை பொறுத்தவரை, பயங்கரவாத அமைப்புகளுக்கு, எந்த மதமும் இல்லை, நிறமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.