காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
சோனியா அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில், அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவே திமுக தலைவர் கருணாநிதி டி.ஆர்.பாலுவை அனுப்பிவைத்ததாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் 2ஜி விவகாரம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு எடுத்ததற்கான காரணம் போன்ற விடயங்கள் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டு, திமுக தரப்பின் நிலையை பாலு எடுத்துரைத்திருக்கலாம் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.