கோதுமை ஏற்றுமதி‌க்கு தடை நீக்கம் - வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை

வெள்ளி, 9 செப்டம்பர் 2011 (11:09 IST)
கோதுமை ஏ‌ற்றும‌தி‌ ‌மீதான தடையை‌ ‌நீ‌க்‌கியு‌ள்ள ம‌த்‌திய அரசு, அதே நேர‌த்‌தி‌ல் வெ‌ங்காய‌ம் ஏ‌ற்றும‌தி‌க்கு தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

உற்பத்தி குறைவின் காரணமாக கையிருப்பு குறைந்ததால், கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது கோதுமையின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

இதையடு‌த்து கோதுமை ஏற்றுமதிக்கு இருந்து வரும் தடையை நீக்குவது என்று நிதியமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்ற அமை‌ச்ச‌ர்க‌ள் குழு கூட்டத்தில் இ‌ந்த முடிவு செய்யப்பட்டது.

இதேபோல் பாசுமதி அல்லாத பிற அரிசி வகைகள் மீதான ஏற்றுமதி தடையும் நீக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமை‌ச்ச‌ர் ஆனந்த் சர்மா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.

மேலும் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருப்பதால் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், 2 வாரங்களுக்கு ஒரு முறை நிலைமை ஆய்வு செய்யப்படும் என்றும் உணவுத்துறை அமை‌ச்ச‌ர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்