வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.20.92 கோடி பதுக்கல்

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2011 (19:35 IST)
இந்தியாவிலிருந்து சுமார் 20.92 லட்சம் கோடி ரூபாய் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் இத்தகவலை தெரிவித்தார்.

வாஷிங்டனைச் சேர்ந்த "குளோபல் ஃபைனான்சியல் இன்டக்ரெட்டி" என்ற அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலிருந்து சுமார் 462 பில்லியன் டாலர் பணம், அதாவது ரூ. 20.92 லட்சம் கோடி வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 213 பில்லியன் டாலர்களை இந்தியா இழந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்