பிரணாப் அலுவலக‌ம் உளவு: பிரதமர் தெளிவுபடுத்த அத்வானி வ‌‌லியுறு‌த்த‌ல்

வெள்ளி, 24 ஜூன் 2011 (10:13 IST)
மத்திய நி‌தி அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி அலுவலகம் உளவு பார்க்கப்பட்டது தொட‌ர்பான உ‌ண்மையை பிரதம‌ர் தெ‌ளிவபடு‌த்த வே‌‌ண்‌டு‌ம்‌ம் எ‌ன்று பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.‌அ‌த்வா‌னி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

டெல்லியில் நட‌ந்த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுக்கூட்டத்தில் அவ‌ர் பேசுகை‌யி‌ல், மத்திய நிதி அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி அலுவலக‌த்தை தொழில் நிறுவனங்கள் உளவு பார்த்து இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

அய‌ல் நாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், இதை செய்திருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும், இது மிகவும் சீரியசான விஷயம்.

இந்த வெட்கக்கேடான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய முழு உண்மைகளையும் பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்த வேண்டும். இப்பிரச்சனையை பா.ஜனதா கூட்டணி வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பும் என்று அ‌த்வா‌னி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்