காமன்வெல்த் ஊழல்: கல்மாடி வீடுகளில் ம.பு.க. சோதனை

வெள்ளி, 24 டிசம்பர் 2010 (11:46 IST)
காமன்வெல்த் போட்டிகளுக்கான செய்த ஏற்பாடுகளில் நடந்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக விசாரித்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி, அவருடைய உதவியாளர் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.

தலைநகர் டெல்லியிலும், மராட்டிய மாநிலம் புனேவிலும் உள்ள கல்மாடியின் வீட்டிலும், அலுவலங்களிலும் இன்று காலை 7 மணி முதல் ம.பு.க. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கல்மாடி வீடு மட்டுமின்றி, அவருடைய தனி செயலர் மனோஜ் பூரே வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாடு செய்ததது தொடர்பான பல கோப்புகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன கோப்புகளில், போட்டிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஒப்பந்தங்கள் விடப்பட்ட தொடர்பான கோப்புகள் அடக்கமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்