வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி மருத்துவமனையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
7-வது நாளாக உண்ணாவிரதம் தொடரும் நிலையில்,அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி குளுகோஸ் ஏற்றுமாறு நிஜாம் மருத்துவமனை டாக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு மருந்துகளும், குளுகோஸýம் ஏற்ற டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
அவரது ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குளுகோஸ் ஏற்றுவதற்கு சந்திரபாபு நாயுடு மறுத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துவிடும். அடுத்த சில மணி நேரங்களில் கோமா நிலைக்குத் தள்ளப்படுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.