ஸ்பெக்ட்ரம்: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

செவ்வாய், 23 நவம்பர் 2010 (13:34 IST)
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சர்ச்சை தொடர்பாக இன்றும் தொடர்ந்து அமளி நிலவியதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று காலை கூடியதும் இரண்டு அவைகளிலும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் நாடாளுமன்றம் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் இதே பிரச்சனையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்