ஐ.பி.எல்.: லஞ்சம் பெற்ற நிறுவனம் ஒப்புதல்

வெள்ளி, 23 ஏப்ரல் 2010 (17:46 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகளை சோனி மல்ட்டி ஸ்க்ரீன் மீடியாவிற்கு வழங்க வேர்ட்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் (WSG) நிறுவனம் ரூ.125 கோடி லஞ்சம் பெற்றதை வருமானவரித் துறை அதிகாரிகளிடம் அந்த நிறுவனத் தலைவர் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று சுமார் 50 வருமானவரித் துறை அதிகாரிகள் சோனி மல்ட்டி ஸ்க்ரீன் மீடியா மற்றும் டபிள்யூ.எஸ்.ஜி. அலுவலகங்களில் கடும் சோதனை நடத்தினர்.

டபிள்யூ.எஸ்.ஜி. நிறுவனத் தலைவர் வேணு நாயரிடம் துருவித் துருவி விசாரணை செய்ததில் அவர் கடைசியில் லஞ்சம் பெற்ற விவரத்தை ஒப்புக் கொண்டதாக வருமானத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மல்ட்டி மீடிய ஸ்க்ரீன் நிறுவனத்தில்தான் மத்திய அமைச்சர் ஷரத் பவாரின் மருமகன் சதானந்த் சுலே 10% பங்கு வைத்திருந்தார் என்ற தகவல்களும் கவனிக்கத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்