மேற்குவங்க ஆளுனர் எம்.கே.நாராயணன்?

வெள்ளி, 15 ஜனவரி 2010 (16:01 IST)
மேற்குவங்க மாநில ஆளுனராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் பொறுப்பேற்கலாம் என்று தெரிகிறது.

கோபிகிருஷ்ணா காந்திக்கு அடுத்தபடியாக நாராயணன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்று அம்மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மட்டத்தில் நாராய்ணனுக்கு இருக்கும் பாதுகாப்பு பற்றிய அனுபவங்களும், உளவு விவகாரத்தில் அவரது திறமையும் மேற்குவங்க மாநில நக்சல் அச்சுறுத்தலை அகற்ற உயவிகரமாயிருக்கும் என்று மத்திய அரசு நம்புவதாக தெரிகிறது.

ஏற்கனவே நாளேடுகளில் எம்.கே. நாராயணன் மும்பை அல்லது கொல்கட்டா ராஜ்பவனை ஆக்ரமிப்பார் என்று செய்திகள் வெளியிட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவராகவும், பயங்கரவாத எத்ர்ப்பு மற்றும் அயலுறவுக் கொள்கைகளில் இவரது அனுபவம் மேற்குவங்க மாநிலம் தற்போது சந்தித்து வரும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்க்க பயன்படும் என்று நம்பப்படுகிறது.

முன்னாள் உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாட்டீலும் இந்தப் பொறுப்பிற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறார் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்