உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி
புதன், 9 டிசம்பர் 2009 (10:31 IST)
வயிற்று வலியால் அவதிப்பட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
நேற்று மாலை முதலே வயிற்று வலியால் நீதிபதி பாலகிருஷ்ணன் அவதிப்பட்டு வந்ததாக நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இன்று காலை புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய பணிகள் எதையும் தலைமை நீதிபதி கவனிக்க மாட்டார் எனக் தெரிகிறது.