கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

ஞாயிறு, 26 ஜூலை 2009 (11:19 IST)
கார்கில் போர் வெற்றியின் 10-ம் ஆண்டு நினைவு தினமான இன்று, போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக புதுடெல்லியில் உள்ள ‘அமர் ஜவான் ஜோதி’ நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில், நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாக்க கார்கில் போரில் வீரர்கள் உயிர்நீத்ததாக குறிப்பு எழுதி பிரதமர் மன்மோகன் சிங் வீரர்களுக்கு புகழாராம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா, ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நோபிள் தம்புராஜ், விமானப்படை துணை தளபதி ஏர்மார்ஷல் பி.கே.பார்போரா ஆகியோரும் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்