முஷாரஃப் ஒரு பொய்யர்: இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி மாலிக்
திங்கள், 27 ஜூலை 2009 (12:26 IST)
கார்கில் போர் குறித்து அடுத்தடுத்து வேறுபடும் கருத்துகளை வெளியிட்டு வரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் ஒரு பொய்யர் என இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி வி.பி.மாலிக் கூறியுள்ளார்.
கார்கில் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் டிராஸ் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய வி.பி.மாலிக், கார்கில் தொடர்பான தகவல்களை அடிக்கடி முஷாரஃப் மாற்றிக் கூறி வருகிறார்.
துவக்கத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளே கார்கில் போரில் ஈடுபட்டதாகக் கூறிய முஷாரஃப், சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டியில், பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பகுதி போரில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார் என்று தனது குற்றச்சாற்றை விளக்கினார்.